மொபட் மீது மினி லாரி மோதி பெண் பலி


மொபட் மீது மினி லாரி மோதி பெண் பலி
x

சூளகிரி அருகே மொபட் மீது மினி லாரி மோதி பெண் பலியானார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அத்திகானூரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48). இவர் ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று தனது தாயார் வசந்தாவை (65) மொபட்டில் அழைத்துக்கொண்டு சொந்த கிராமம் நோக்கி சென்றார். வழியில் சூளகிரியை அடுத்த சப்படி என்ற பகுதியின் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று, மொபட்டின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் வசந்தா, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளகிரி போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த சிவகுமாரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story