உடுமலை சட்டமன்ற தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்


உடுமலை சட்டமன்ற தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
x

உடுமலை சட்டமன்ற தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

திருப்பூர்

உடுமலை

உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. உடுமலை தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

வரைவுவாக்காளர் பட்டியல்

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த்கண்ணன் வெளியிட்டார். மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை மடத்துக்குளம் தொகுதி.சி.மகேந்திரன் எம்.எல்.ஏ,(அ.தி.மு.க.), அ.தி.மு.க. உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் போடிபட்டி ஆர்.ஜி.ஜெகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் போகநாதன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

உடுமலை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை தி.மு.க.நகர செயலாளர் செ.வேலுச்சாமி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், இந்திய கம்யூனிஸ்டுகட்சி செயலாளர் வி.சவுந்தரராஜன், பா.ஜனதா கட்சி நகர தலைவர் எம்.கண்ணாயிரம், துணைத்தலைவர் உ.மா குப்புசாமி, தே.மு.தி.க. செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

உடுமலை தொகுதி

கடந்த ஜனவரிமாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உடுமலை சட்டமன்றத்தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 16 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 41 ஆயிரத்து 75 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2லட்சத்து 72 ஆயிரத்து 119 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு 618 ஆண் வாக்காளர்களும், 1,024 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,642 வாக்காளர்கள் புதியதாகசேர்க்கப்பட்டனர்.

6,002ஆண்வாக்காளர்களும், 6,466 பெண்வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் எனமொத்தம் 12,471 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று வெளியிடப்பட்ட வரைவுவாக்காளர் பட்டியல்படி உடுமலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 632 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 633 பெண் வாக்காளர்களும், 25 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2லட்சத்து 61ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர்.

மடத்துக்குளம் தொகுதி

கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 701 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 290 பெண் வாக்காளர்களும், 22இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 13 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு 619 ஆண்வாக்காளர்களும், 1,096 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,715 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டனர். 7,466 ஆண் வாக்காளர்கள், 8,266 பெண் வாக்காளர்கள், 2 இதர வாக்காளர்கள் எனமொத்தம் 15,734 வாக்காளர்களது பெயர்கள் நீக்கப்பட்டன.

அதன்படி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 854 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 120 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் எனமொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 994 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதிக்கு பிறகு, இறந்தவர்களது பெயர்கள் மற்றும் வேறு தொகுதிகளுக்கு முகவரி மாறி சென்றவர்கள் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால், ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை விட நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி உடுமலை தொகுதியில் 10,829 வாக்காளர்களும், மடத்துக்குளம் தொகுதியில் 14,019 வாக்காளர்களும் குறைந்துள்ளனர்.

நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் ஜி.விவேகானந்தன், உடுமலை தாசில்தார் வி.கண்ணாமணி, தேர்தல் துணை தாசில்தார் எம்.சையது ராபியம்மாள், மடத்துக்குளம் தாசில்தார் டி.செல்வி, தேர்தல் துணை தாசில்தார் ஜி.ராஜேந்திரபூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

-


Next Story