சேலம் அருகேதனியாக வசித்து வந்த பெண் மதுபாட்டிலால் குத்திக்கொலைகணவர், நண்பரிடம் போலீசார் விசாரணை


சேலம் அருகேதனியாக வசித்து வந்த பெண் மதுபாட்டிலால் குத்திக்கொலைகணவர், நண்பரிடம் போலீசார் விசாரணை
x
சேலம்

அயோத்தியாப்பட்ட ணம்

சேலம் அருகே உள்ள காாிப்பட்டியில் மதுபாட்டிலால் குத்தி பெண் படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என கணவர் மற்றும் நண்பரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தனியாக வசித்த பெண்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காரிப்பட்டி குழந்தைசாமி நாடார் நகரை சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி சசிகலா (வயது 31). இவர்களுக்கு பரத் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து காரிப்பட்டியிலேயே சசிகலா வசித்து வந்தார். அதே நேரத்தில் ராமன் தனது குழந்தைகளுடன் திருப்பூருக்கு சென்று அங்கு வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனியாக வசித்து வந்த சசிகலா நேற்று காலை 10 மணி அளவில் காரிப்பட்டி ஜெ.ஜெ.நகரில் உள்ள பொட்டல் காட்டில் மது பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ரத்தக்கறையுடன் கிடைத்த உடைந்த மதுபாட்டில் உள்ளிட்ட தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சம்பவம் ெதாடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவர், நண்பரிடம் விசாரணை

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

சசிகலா, ராமன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து சசிகலாவிற்கும், ராமனின் நண்பர் பிரபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சசிகலாவிற்கும், பிரபுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாமா? என சந்தேகத்தின் பேரில் பிரபுவிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல் கணவர் ராமனிடமும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

இந்த சம்பவம் காரிப்பட்டி பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.


Next Story