விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம்-வேளாண்மை அதிகாரி தகவல்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு ஜிப்சம் மற்றும் ஜிங்க் சல்பேட் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், வங்கி கணக்கு எண், புகைப்படம் மற்றும் நிலத்தின் சிட்டா ஆகியவற்றை அ.பள்ளிபட்டியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கொடுத்து மானிய விலையில் ஜிப்சம், ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story