குஜராத்தில் இருந்து ஈரோட்டுக்கு 2,200 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது


குஜராத்தில் இருந்து ஈரோட்டுக்கு 2,200 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது
x

குஜராத்தில் இருந்து ஈரோட்டுக்கு 2 ஆயிரத்து 200 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது.

ஈரோடு


குஜராத்தில் இருந்து ஈரோட்டுக்கு 2 ஆயிரத்து 200 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது.

2,200 டன் யூரியா

ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வேளாண்மை பணிக்கு தேவையான உரம் வெளிமாநிலங்களில் இருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து கிரிப்கோ நிறுவனத்தின் சார்பில் 2 ஆயிரத்து 200 டன் 'பாரத்' யூரியா உரம் சரக்கு ரெயில் மூலமாக ஈரோடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரெயில் ஈரோட்டுக்கு வந்தது. ரெயிலில் இருந்து உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி குடோனுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த பணிகளை வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி, வேளாண்மை அதிகாரி (தரக்கட்டுபாடு) கு.ஜெயசந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறியதாவது:-

இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்காக 5 ஆயிரத்து 347 டன் யூரியா, 2 ஆயிரத்து 585 டன் டி.ஏ.பி. உரம், 1,400 டன் பொட்டாஷ், 10 ஆயிரத்து 169 டன் காம்ப்ளக்ஸ் உரம், 896 டன் சூப்பர் பாஸ்பேட் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்பெறலாம். திண்டலில் உள்ள வேளாண்மை துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்துவதன் மூலமாக உரச்செலவை குறைத்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story