உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை


உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை
x

உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் காணையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்ட தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் ரங்கநாதன், சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் சடையப்பன், தீர்மானம் வாசித்தார்.

மாநாட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். வட்ட செயலாளர் நாகராஜன், வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் சிவராமன், மாநிலக்குழு உறுப்பினர் தாண்டவராயன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்.

கூட்டத்தில் நெல் மூட்டைகளை பாதுகாத்திட காணையில் சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 60 வயது முடிந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பருவமழை தொடங்கும் முன்பு ஏரி, குளங்களை தூர்வார சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் வட்ட துணைத்தலைவர் அண்ணாமலை நன்றி கூறினார்.


Next Story