பூதிமுட்லு கிராமத்தில்சந்தனக்கூடு உரூஸ் திருவிழா


பூதிமுட்லு கிராமத்தில்சந்தனக்கூடு உரூஸ் திருவிழா
x
தினத்தந்தி 15 Sept 2023 1:00 AM IST (Updated: 15 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பூதிமுட்லு கிராமத்தில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா நடந்தது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த பூதிமுட்லு கிராமத்தில் உள்ள தர்காவில் நேற்று சந்தனக்கூடு உரூஸ் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பூதிமுட்லு முதல் வேப்பனப்பள்ளி வழியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் தர்கா சென்றதும் நடனமாடினர். பின்னர் சந்தனக்கூடத்தில் இருந்து சந்தனத்தை தர்காவில் பூசி வழிபட்டனர். விழாவில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைவருக்கும் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story