மாரியம்மன் கோவில் திருவிழா
ஜோதிஅள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. ஒவ்வொரு வருடமும் கிராம மக்கள் ஒன்றிணைந்து வைகாசி மாதம் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். விழாவையொட்டி முக்கிய நிகழ்வாக அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். இதையடுத்து அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல், தட்டுவரிசை எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல், பால்குடம் எடுத்தும் பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும், பொங்கல் வைத்தும், ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story