சன்னமேடு ஆயமரத்து கருப்பனார் கோவில் திருவிழா


சன்னமேடு ஆயமரத்து கருப்பனார் கோவில் திருவிழா
x

சன்னமேடு ஆயமரத்து கருப்பனார் கோவில் திருவிழா நடந்தது.

நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரம் ஊராட்சியில் சன்னமேடு ஆயமரத்து கருப்பனார் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது. இதையொட்டி நள்ளிரவு ஒரு மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் அளவாய்ப்பட்டி, பழந்தின்னிப்பட்டி, அத்தனூர், வெண்ணந்தூர், நல்லா கவுண்டம்பாளையம், மணிவிழுந்தான் காலனி, ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கிடா விருந்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story