சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் தீமிதி விழா
சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் தீமிதி விழா நடந்தது.
நாமக்கல்
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பண்டிகை கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 22-ந் தேதி மறு காப்பு கட்டுதல் நடந்தது.
பண்டிகையின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நேற்று நடந்தது. மழை காரணமாக பக்தர்கள் முன்னதாகவே தீ குண்டத்தில் இறங்கி தீ மிதிக்க தொடங்கினர். பக்தர்கள் சிலர் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (செவ்வாய்க்கிழமை) கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கம்பம் பிடுங்குதலுடன் பண்டிகை நிறைவடைகிறது.
Next Story