புனித அருளானந்தர் ஆலய திருவிழா


புனித அருளானந்தர் ஆலய திருவிழா
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புனித அருளானந்தர் ஆலயதில் திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில்

காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான ஆலய திருவிழா கடந்த 27-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் மாலை நவநாள் திருப்பலி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை திருவிழா, திருப்பலி நடைபெற்றது. பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அருளானந்தரின் உருவம் தாங்கிய சப்பரப்பவனி நடந்தது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நேற்று காலை ஞாயிறு சிறப்பு திருப்பலியில் முதல் இறை உணவு ஏற்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

விழாவையொட்டி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் துணை சூப்பிரண்டு சி.பி. சாய் சவுந்தர்யன், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி உள்பட 150 போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story