தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்


தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூரை அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அரூர், தர்மபுரி, ஊத்தங்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்தமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.


Next Story