திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜெகந்நாதர் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 5-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜெகந்நாதர் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 5-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பங்குனி உத்திர திருவிழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணியில் உள்ளது ஸ்ரீஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோவில். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற இந்த பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில் திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோவிலில் இந்த ஆண்டின் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 11 மணி அளவில் கோவிலின் பெருமாள் சன்னதி எதிரே பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் பெருமாளின் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்பட்டது.

இதைதொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம் மற்றும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று கொடிமரத்திற்கும், அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த பெருமாளுக்கும் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றன.

தேரோட்டம்

கொடியேற்ற நிகழ்ச்சியில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் 6-வது நாள் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற ஏப்ரல் 2-ம் தேதி இரவு 7 மணியிலிருந்து எட்டு மணிக்குள் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதுபோல் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 9-வது நாளான பங்குனி உத்திரத்தன்று காலை ஆதி ஜெகந்நாதர் பெருமாள் எழுந்தருள தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான பரம்பரை தர்மகர்த்தா ராணி ராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின் பேரில் சமஸ்தான தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் மற்றும் திருப்புல்லாணி கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


Next Story