முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி உற்சவ திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி உற்சவ திருவிழா நடைபெற்றது
தொண்டி
திருவாடானை தாலுகா கருமொழி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி உற்சவ திருவிழா நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருவிளக்கு பூஜை, பூத்தட்டு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பிள்ளையார் கோவிலில் இருந்து காவடி பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும், அம்மன் கரகம் எடுத்து வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இளைஞர் மன்றத்தின் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. பூஜைகளை கோவில் பூசாரி காளிதாஸ் நடத்தினார். இதனையொட்டி வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கருமொழி மற்றும்சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கருமொழி கிராமமக்கள் செய்து இருந்தனர்.