சிவன் கோவிலில் சித்திரை திருவிழா


சிவன் கோவிலில் சித்திரை திருவிழா
x

நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவன் கோவில்

நெல்லை தச்சநல்லூரில் சிவன் கோவில் என அழைக்கப்படும் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. 6-15 மணிக்கு மேளதாளம் முழங்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

வீதி உலா

17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மகாகணபதி ஹோமமும், 12 மணிக்கு கிராம தேவதை வழிபாடும், இரவு 8 மணிக்கு கொடிபட்டம் வீதி உலாவும் நடக்கிறது.

விழா நாட்களில் காலையில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலாவும் நடக்கிறது. 7-ம் திருநாளான 24-ம் தேதி இரவு சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் மற்றும் நடராஜர், சிவகாமி அம்பாள் சிவப்பு சாத்தி சப்பரத்தில் வீதி உலாவும் நடக்கிறது.

8-ம் திருநாளான 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தி சப்பரத்தில் வீதி உலாவும், 9 மணிக்கு நடராஜர் சிவகாமி அம்பாள் பச்சை சாத்தி சப்பரத்தில் வீதி உலாவும், 11 மணிக்கு முருகர் பாரிவேட்டை நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு கங்காளநாதர் சப்பரத்தில் வீதி உலாவும், இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் தேர் கடாட்சமும் வீதி உலாவும் நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 6.50 மணிக்கு வருசாபிஷேகமும், காலை 10.43 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளி தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 27-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு 9 மணிக்கு பைரவர் பூஜையும் நடக்கிறது.


Next Story