கொறுக்கை கால்நடை பண்ணையில் மாட்டு பொங்கல் விழா
கொறுக்கை கால்நடை பண்ணையில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி அருகே கொறுக்கை கிராமத்தில் கால்நடை பண்ணை உள்ளது. இந்த பண்ணை உம்பளச்சேரி இன கால்நடைகளுக்கு என பிரத்யேகமாக உள்ள பண்ணையாகும். இங்கு 674 உம்பளச்சேரி இன மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பண்ணையில் உதவி டாக்டர் நெப்போலியன் தலைமையில் பண்ணை மேலாளர் யோகா முன்னிலையில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாடுகளை குளிப்பாட்டி மாவிலை, நெல்லி, இலை, கோரைப்புல் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பொங்கல், பழங்கள் படைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பண்ணை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story