அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.
சித்திரை திருவிழா
தமிழ் ஆண்டின் தொடக்கமான சித்திரை மாதம் என்றாலே கோவில் திருவிழா சீசன் தான். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் திருவிழா சீசன் களை கட்ட தொடங்கி உள்ளது. குறிப்பாக அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் விமரிசையாக நடந்து வருகின்றன.
திருவாரூர் அருகே உள்ள தென்குடி மாரியம்மன், கொத்தவாசல் மகா மாரியம்மன், இஞ்சிக்குடி அய்யனார், திருக்கொட்டாரம் மகாமாரி அம்மன், பேட்டை தப்பத்தான்வெளி ஏழுமுக காளியம்மன், பெரியகொத்தூர் வடிவழகி அம்மன், லட்சுமாங்குடி உத்திரபுரீஸ்வரர் கோவில், பாலியாபுரம் செல்லியம்மன், கண்டியூர் வீரமாகாளி, விஜயபுரம் முத்துமாரி, சுண்ணாம்புக்காரத்தெரு காமாட்சியம்மன், பாலையக்கோட்டை செல்வ விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.
மாரியம்மன் கோவில்கள்
ஆவணம் காளியம்மன், பாரதிதெரு முத்துமாரியம்மன், கிடாரங் கொண்டான் ஆலடி மாரியம்மன், ராதாநல்லூர் மதுரை மீனாட்சி அம்மன், செம்படவன்காடு மகாசக்தி மாரியம்மன், திருநெல்லிக்காவல் அய்யனார் வீரன், பெரியபுத்தூர் வடிவழகி அம்மன், குச்சிபாளையம் மாணிக்க விநாயகர், பூந்தோட்டம் உச்சிமகா காளியம்மன், ஒரத்தூர் திரவுபதி அம்மன், மன்னார்குடி கருமாரியம்மன், மருதபட்டணம் காமாட்சி அம்மன், கற்கத்தி பொன்னியம்மன், குரும்பல் முத்துமாரியம்மன், வீரமாகாளி, சித்தமல்லி ஆகாசவீரனார் ஆகிய கோவில்களிலும் திருவிழா நடந்துள்ளது.
இதில் சாமி புறப்பாடு, பூச்சொரிதல், காவடி வழிபாடு, கஞ்சி வார்த்தல், பால்குடம் எடுத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல் பல்வேறு கோவில்களில் திருவிழாக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.