வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் உத்திரியமாதா ஆண்டு திருவிழா


வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் உத்திரியமாதா ஆண்டு திருவிழா
x

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் உத்திரியமாதா ஆண்டு திருவிழாகொடியேற்றுத்துடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் உத்திரியமாதா ஆண்டு திருவிழாகொடியேற்றுத்துடன் தொடங்கியது.

உத்திரியமாதா ஆண்டு திருவிழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. பிரசித்திப்பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் உத்திரியமாதா திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழாவானது நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி விழா நிறைவடைகிறது. கொடியேற்றத்தையொட்டி நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து கொடி பவனி புறப்பட்டது.

கொடியேற்றம்

கடற்கரை சாலை, ஆரியநாட்டுசாலை வழியாக நடைபெற்ற பவனி, மீண்டும் பேராலயத்தை அடைந்தது. அங்கு பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடி புனிதம் செய்யப்பட்டு பேராலயத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றிவைக்கபட்டது.இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், சகோதரிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தனர் .விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.


Next Story