புனித லூர்துஅன்னை ஆலய திருவிழா


புனித லூர்துஅன்னை ஆலய திருவிழா
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை புனித லூர்துஅன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை வேதகோவில் தெரு புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை பங்குதந்தை ஜெமல்ஸ் கொடியை அர்ச்சித்து திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் துணை கொடிகள் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் ஆலய பங்கு தந்தை அண்டோ, பங்குதந்தையர்கள் ஜெமல்ஸ், மைக்கேல் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. கழுகுமலை பகுதி கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணியளவில் ஆலய வளாகத்தில் திருப்பலி நடைபெறும். வருகிற 20-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் லூர்து அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. வருகிற 21-ந் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது.


Next Story