கிராம தேவதை பிடாரி அம்மன் உற்சவம்


கிராம தேவதை பிடாரி அம்மன் உற்சவம்
x

கிராம தேவதை பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் ஏரிக்கு அருகே உள்ள கிராம தேவதை பிடாரி அம்மன் உற்சவம் இன்று நடைபெற்றது.

இதைமுன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏராளமான பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

மாலையில் உற்சவ அம்மனை அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுடன், இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story