ஆடித்திருவிழா தேரோட்டம்


ஆடித்திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2023 1:15 AM IST (Updated: 2 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தாடிக்கொம்பு சவுந்தரராஜா பெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா தேரோட்டம் நடந்தது.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தார். கடந்த 30-ந் தேதி மாலை சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆண்டாள் சவுந்தரவல்லி தாயாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி திருமண கோலத்தில் பூ பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை தாடிக்கொம்பு சண்முகவேல் மில்ஸ் குழும தலைவர்கள் வேலுச்சாமி கவுண்டர், கந்தசாமி கவுண்டர் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தனர். விழாவில் தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னதம்பி, துணைத் தலைவர் நாகப்பன், அகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயபால், தொழில் அதிபர் பி.எம்.எஸ். முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாளை (வியாழக்கிழமை) தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.


Next Story