திண்டுக்கல்லின் பிரபல உணவுகளுடன் திருவிழா


திண்டுக்கல்லின் பிரபல உணவுகளுடன் திருவிழா
x

திண்டுக்கல்லின் பிரபல உணவுகளுடன் திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் திண்டுக்கல்லில் நேற்று உணவு திருவிழா நடந்தது. இதையொட்டி கொடைக்கானலில் தயாரிக்கப்படும் சாக்லெட், திண்டுக்கல் கடலை மிட்டாய், பிரபல ஓட்டல்களின் பிரியாணி, அசைவ உணவுகள், சத்தான தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகள், கேக் வகைகள், மரச்செக்கு மற்றும் கல்செக்கில் எடுக்கப்பட்ட எண்ணெய் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன. மொத்தம் 45 அரங்குகளில் உணவுகள், உணவு பொருட்கள் இடம்பெற்று இருந்தன.

இந்த உணவு திருவிழாவுக்கு மாநகராட்சி மேயர் இளமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை மேயர் ராஜப்பா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் சிவராமபாண்டியன் வரவேற்றார். உணவு திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், சிந்தனை பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன. இந்த உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்று விதவிதமான உணவுகளை ருசித்து சாப்பிட்டனர். மேலும் சத்தான உணவுகள் வகைகள், கலப்பட உணவுகளை கண்டறிதல் குறித்து விளக்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், லாரன்ஸ், மோகனரங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story