வயல் தினவிழா


வயல் தினவிழா
x

வயல் தினவிழா நதிக்குடி கிராமத்தில் நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

வெம்பக்கோட்டை வட்டார விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா திட்டம்) வயல் தினவிழா நதிக்குடி கிராமத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா தலைமை தாங்கினார். நதிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பாகிரதி மாரிமுத்து முன்னிலை வகித்தார். சாத்தூர் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனை துறை உதவி வேளாண்மை அதிகாரி சில்பா ராணி, இளநிலை. ஆய்வாளர் முகிலரசி, மீன்வள துறை மேற்பார்வையாளர் ராமகவுண்டன், விருதுநகர் மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் மூலம் தொழில்முனைவோர் மாரிஸ்வரி, உதவி பொறியாளர் விஜய லட்சுமி, உதவி தோட்டகலை அலுவலர் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நதிக்குடி கிராமத்தை சேர்ந்த 100 விவசாயிகள் கலந்துகொண்டனர். விழாவில் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் வெம்பக்கோட்டை வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்து செல்வி, உதவி வேளாண்மை அலுவலர்கள் கருப்பசாமி, முத்துகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story