நெடுஞ்சாலை பணிகள் குறித்து உள் தணிக்கை குழுவினர் கள ஆய்வு


நெடுஞ்சாலை பணிகள் குறித்து உள் தணிக்கை குழுவினர் கள ஆய்வு
x

நெடுஞ்சாலை பணிகள் குறித்து உள் தணிக்கை குழுவினர் கள ஆய்வு செய்யப்பட்டது.

கரூர்

சின்னதாராபுரம், கொடுமுடி நெடுஞ்சாலையில் சேலம் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்புப் பொறியாளர் சரவணன் தலைமையில் நெடுஞ்சாலைகள் பணிகள் குறித்து உள் தணிக்கை குழுவினர் கள ஆய்வுகள் மேற்கொண்டனர். கரூர் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட இதன் ஒரு பகுதியாக சிஆர்ஐடிபி 2022-23 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பரமத்தி -ராஜபுரம் வரை சாலை மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு, சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.தொடர்ந்து சின்னதாராபுரம் - கொடுமுடி வரை இடை வழி தடத்தை இருவழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்வது, சாலைப் பணிகளையும் சேலம் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் ரவிக்குமார், சேலம் தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ரமேஷ், திருப்பூர் தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story