கற்கும் பாரதம் திட்டத்தில் களப்பயண பயிற்சி
கற்கும் பாரதம் திட்டத்தில் களப்பயண பயிற்சி நடந்தது.
பெரம்பலூர்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கற்கும் பாரதம் திட்டத்தில் பயிலும் முதியவர்களுக்கு களப்பயணம் பயிற்சி நடைபெற்றது. இதில் களப்பயணமாக வயலப்பாடி தபால் நிலையம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஆகியவற்றுக்கு கற்போர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தபால் நிலைய அலுவலர் ராஜேந்திரன், தபால் நிலையத்தில் பணம் செலுத்தும் படிவம், பணம் எடுக்கும் படிவம் ஆகியவற்றை நிரப்பும் முறைகள் குறித்து விரிவாகக் கூறினார். வங்கியில், அதன் செயல்பாடுகள் குறித்தும், பணம் எடுக்கும் படிவம் மற்றும் பணம் செலுத்தும் படிவம் நிரப்பும் முறைகள் குறித்தும் விரிவாக கூறப்பட்டது. களப்பயணத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன், வேப்பூர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பொன்மலர்பிரியா, திட்ட தன்னார்வலர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story