பள்ளிபாளையத்தில் டாஸ்மாக் பாரில் கோஷ்டி மோதல்
பள்ளிபாளையத்தில் டாஸ்மாக் பாரில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
நாகப்பட்டினம்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் கொக்கராயபேட்டை அருகே அம்மாசிபாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையையொட்டி பார் உள்ளது. அங்கு நேற்று இரவு மதுப்பிரியர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். 9 மணி அளவில் அங்கு மது அருந்தி இரு தரப்பினருக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரையொருவர் பாட்டில், கைகளால் தாக்கி கொண்டனர். மேலும் டாஸ்மாக் பாரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து டாஸ்மாக் பார் நிர்வாகத்தினர் பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் ல்அங்கு விரைந்து சென்று, மோதலில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாஸ்மாக் பாரில் இரவில் நடந்த இந்த மோதல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story