களை கட்டிய மீன் மார்க்கெட்
திருப்பூர் மீன் மார்க்கெட்டிற்கு கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து கடல் மீன் மற்றும் அணை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனை களை கட்டியது. மார்க்கெட்டில் மத்தி மீன் மட்டும் ஒரு கிலோ ரூ.80-ற்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ வஞ்சிரம், வெள்ளை வாவல் ஆகியவை கடந்த வாரம் ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று வஞ்சிரம் ரூ.1000, வெள்ளை வாவல் ரூ.900 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல், கருப்பு வாவல் ரூ.700, பாறை ரூ.450, பால்சுறா, சங்கரா, நண்டு, முரல், ஊழி ஆகியவை தலா ரூ.300, வௌமீன் ரூ.400, அயிலை ரூ.150, இறால் ரூ.350 முதல் ரூ.450, கிழங்கான் ரூ.140, நெத்திலி ரூ.250 கட்லா ரூ.160, ரோகு ரூ.140, டேம் பாறை ரூ.130, நெய்மீன் ரூ.110, ஜிலேபி மீன் ரூ.100 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சுமார் 50 டன் மீன்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.