கோர்ட்டில் போலி ஆவணம் தாக்கல்; லாரி உரிமையாளர் மீது வழக்கு


கோர்ட்டில் போலி ஆவணம் தாக்கல்; லாரி உரிமையாளர் மீது வழக்கு
x

கோர்ட்டில் போலி ஆவணம் தாக்கல்; லாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாமுண்டி மாடவீதியை சேர்ந்தவர் ராமையா. லாரி உரிமையாளர். இவரது லாரி 2016-ம் ஆண்டு விராலிமலை தாலுகா கொடும்பாளூர் பிரிவு சாலை அருகே சென்றபோது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், இவர் வாகன காப்பீட்டு தொகை பெற தனியார் இன்சூரன்ஸ் பெயரில் போலி ஆவணம் தயாரித்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ரூ.10 லட்சம் பெற முயன்றதாக இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனிடம் புகார் செய்தார். அதன் பேரில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு விராலிமலை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன் பேரில் விராலிமலை போலீசார் லாரி உரிமையாளர் ராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story