சினிமா இயக்குனர் வசந்த் சாமி தரிசனம்


சினிமா இயக்குனர் வசந்த் சாமி தரிசனம்
x

பாதாள செம்பு முருகன் கோவிலில், சினிமா இயக்குனர் வசந்்த் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல்

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்தவர் வசந்த். பிரபல தமிழ் சினிமா இயக்குனர். இவர், கேளடி கண்மணி, ஆசை, ரிதம், நேருக்குநேர் உள்ளிட்ட சினிமா படங்களை இயக்கியுள்ளார். வசந்த் இயக்கிய, 'சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' என்ற சினிமாவுக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தன.

நேற்று இவர், தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் உள்ள பாதாளசெம்பு முருகன் கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர், மனம் உருக பாதாள செம்பு முருகனை பிரார்த்தனை செய்தார். மேலும் 8 கருங்காலி மாலைகளை அணிந்தும், பாதாள செம்பு முருகனுக்கு அணிவித்தும் தரிசனம் செய்தார். முருகப்பெருமானுக்கு வெள்ளியினால் ஆன வேல் படைத்து அவர் அன்னதானம் வழங்கினார். வசந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கோவில் ஆதினம் சித்த அருள் சுவாமி அறிவாதினம் மூலிகை திருநீறு வழங்கி ஆசி வழங்கினார்.


Next Story