கோவில்களில் திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் சாமி தரிசனம்
கழுகுமலை கோவில்களில் திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் சாமி தரிசனம் செய்தார்.
கழுகுமலை:
கழுகுமலை கோவில்களில் திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் சாமி தரிசனம் செய்தார்.
இயக்குனர் வெங்கடேஷ்
பிரபல தமிழ் சினிமா திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் உறவினர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலைக்கு வந்தனர். அவர்களை கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பிரதோஷ குழு தலைவர் முருகன் வரவேற்றார். தொடர்ந்து இயக்குனர் வெங்கடேஷ், மலையை குடைந்து கட்டப்பட்ட வெட்டுவான் கோவிலை பார்வையிட்டார். பின்னர் மலை மீது உள்ள அய்யனார் கோவில் மற்றும் பேச்சியம்மன் கோவில், கருப்பசாமி கோவில், சென்னம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மலையடிவாரத்தில் உள்ள கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அனைவரும் பார்க்க வேண்டிய இடம்
பின்னர் இயக்குனர் வெங்கடேஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோவிலில் தைப்பூச நாளில் சாமி தரிசனம் செய்தது மனம் நிறைவாக உள்ளது. மேலும் மலையில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் எல்லோரா சிற்ப கலைக்கு இணையாக உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய இடமாக இந்த கழுகுமலை உள்ளது. விரைவில் கழுகுமலையில் முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க உள்ளேன். தமிழில் விஜய் நடித்த பகவதி, சரத்குமார் நடித்த ஏய், சிலம்பரசன் நடித்த குத்து, தம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளேன்' என்றார்.