திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்
திருப்பத்தூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, மாவட்ட ஊராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன், மாவட்ட ஊராட்சி செயலாளர் சேகர் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்படி மாவட்ட ஊராட்சி 13, நகராட்சிகள் 125, பேரூராட்சிகள் 44 ஆக மொத்தம் 182 வாக்காளர்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story