திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்


திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட (நாகை மற்றும் மயிலாடுதுறை) திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியல் மாவட்ட வருவாய் அலுவலர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த அனைத்து நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.மாவட்ட ஊராட்சி திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஊரக பகுதியில் இருந்து 9 உறுப்பினர்களும், நகர்புற பகுதியில் இருந்து 3 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களை பேரூராட்சி, நகராட்சி மன்ற உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story