மாணவருக்கு நிதி உதவி


மாணவருக்கு நிதி உதவி
x

மாணவருக்கு நிதி உதவியை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்

திருநெல்வேலி

அம்பை:

அம்பை தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் முகமது ரிபாய் என்ற மாணவன் மாநில அளவிலான செவித்திறன் குன்றியவர்களுக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கு பெற்று முதலிடம் பெற்று மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது குடும்ப சூழ்நிலை காரணமாகவும், போதிய பண வசதி இல்லாத காரணத்தால் போட்டிக்கு செல்ல மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்க பணம் இல்லாமல் இருத்தார்.

இதையடுத்து அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவை மாணவரின் பெற்றோர் நேரில் சந்தித்து போட்டிக்கு செல்ல பண உதவி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். உடனே மாணவருக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும், போட்டிக்கு சென்று வர முழு செலவையும் ஏற்று ரூ.25 ஆயிரம் நிதி உதவியை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.


Next Story