பஸ் நிறுத்தத்தில் நடந்த விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி


பஸ் நிறுத்தத்தில் நடந்த விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிறுத்தத்தில் நடந்த விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

பஸ் நிறுத்தத்தில் நடந்த விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

அரக்கோணத்தை அடுத்த மின்னல் எஸ்.ஆர்.கண்டிகை சாலை பஸ் நிறுத்தத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதியன்று ஒரு மாதத்திற்கு நடந்த சாலை விபத்தில் 34 பேர் இறந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கையினை வைத்தார். அதனை ஏற்று முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி குருவராஜபேட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு இறந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் தாசில்தார் (பொறுப்பு) சுமதி, அரக்கோணம் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி., ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர், தி.மு.க.மேற்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர் மற்றும் அலுவலர்கள் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story