2 பேர் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நிதி உதவி


2 பேர் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நிதி உதவி
x

மின்னல் தாக்கி பலியான 2 பேர் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே முக்குளம் சாத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட தளிக்கோட்டை காலனியை சேர்ந்த அன்பரசன் (வயது 55). இவரது மகன் அருள்முருகன் (25). இருவரும் வயலில் நீர் பாய்ச்ச சென்ற போது மின்னல் தாக்கி இறந்தனர். மின்னல் பலியானவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.8 லட்சம் வழங்க திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, மின்னல் தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 8 லட்சத்துக்கான காசோைலயை வழங்கினார். அப்போது மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story