பாலமேட்டில் மாடு முட்டி இறந்த வீரரின் குடும்பத்துக்கு நிதிஉதவி
பாலமேட்டில் மாடு முட்டி இறந்த வீரரின் குடும்பத்துக்கு நிதிஉதவி வழங்கப்பட்டது
மதுரை
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 16-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் பாலமேட்டை சேர்ந்த அரவிந்தராஜன் என்ற மாடுபிடி வீரர் பலியானார். பலியான வீரரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் சொந்த நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் நிவாரண நிதியை மாடுபிடி வீரரின் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கி, ஆறுதல் கூறினார்கள். அப்போது மாவட்ட கலெக்டர் அனீஷ் ேசகர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story