இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி


இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி
x

ராஜபாளையத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா ரஞ்சித். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் 1997-ம் ஆண்டு 2-வது பேட்சில் இவருடன் பணியில் சேர்ந்த போலீசார் சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரி நாதன் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சக போலீசார் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஜோஸ்வா ரஞ்சித்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி ெசலுத்தினர். இதையடுத்து 2,600 போலீசாரிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.12.81 லட்சத்தை அவரது இரண்டு மகன்களான பால்வசந்த், ரோஷன் பியாஸ் பெயர்களில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்ட பத்திரங்களை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர்.


Next Story