வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி; வாலிபர் கைது


வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

காரைக்குடி

தஞ்சாவூர் கோழிக்கரை தெருவை சேர்ந்தவர் கரண் (வயது 27). இவர் தனக்கும் தனது மைத்துனர் சந்தோஷ் ஆகியோருக்காக சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்காக காரைக்குடி வைரவபுரம் வைரவப்பாலன் என்பவரிடம் வங்கி மூலமாக ரூ.8 லட்சத்து 19 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளனர். ஆனால் ஏஜென்ட் வைரவபாலன் தான் கூறியபடி இருவரையும் சிங்கப்பூருக்கு அனுப்பாமல் ஏதேதோ காரணம் சொல்லி நாட்களை கடத்தி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த கரண் பணத்தை திருப்பி கேட்ட போது வைரவபாலன் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்டபோது கொடுக்க மறுத்துள்ளார். இது குறித்து கரண் காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதனையொட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த வைரவபாலனை கைது செய்தனர்.


Next Story