ரூ.27.80 லட்சத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தாத அதிகாரி மீது வழக்கு
ஓசூரில் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த ரூ.27.80 லட்சத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தாத அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
நாமக்கல் மாவட்டம் வேலூர் பக்கமுள்ள நல்லிபாளையம் புதூரை சேர்ந்தவர் தேவராஜ். இவர் ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சேலம் சரக தனியார் நிதி நிறுவன அதிகாரி கண்ணன், ஓசூரில் உள்ள தனது நிறுவன கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் தேவராஜ் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்த ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்து 560-ஐ நிறுவனத்திற்கு உரிய முறையில் செலுத்தாமல் வைத்து இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரி கண்ணன் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story