புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டெடுப்பு


புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டெடுப்பு
x

துறையூர் அருகே புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டது.

திருச்சி

துறையூர் அருகே புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டது.

ஆய்வு

துறையூரை அடுத்த பகளாவாடி மலைத்தொடரில் உப்பிலியபுரத்தை சேர்ந்த தனியார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அங்கு புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்துள்ள தொன்மைச் சான்றுகள் கிடைத்துள்ளன.

புதியகற்காலத்தைச் சேர்ந்த மக்கள் நாகரிகத்தில் முன்னேற்றமடைந்திருந்தனர். மலைசார்ந்த இடங்கள், பள்ளத்தாக்குகள், ஆற்றங்கரைகளிலும் மரங்கள் காடுகள் நிறைந்த பகுதிகளிலும் தமது வாழ்விடங்களை அமைத்துக்கொண்டனர்.

கல்கருவிகளை தீட்டி வழவழப்பாக்கி கைக்கோடாரி, உளி போன்றவற்றை உருவாக்கினர். இக்காலத்தில்தான் சக்கரம் கொண்டு மண்பாண்டம் செய்யத் தொடங்கினர். பின் கால்நடைவளர்ப்பு, மாடுகளை உழவிற்குப் பயன்படுத்தினர். தானியங்களை பெரிய பானைகளில் சேமித்து வைத்தனர். தமக்குத் தேவையான உணவு பொருட்களை விளைவிக்க தொடங்கினர். தமது வாழ்விடங்களை மண், கல் பயன்படுத்தியும், மேற்கூரையை சோளத்தட்டை, வைக்கோல் கொண்டும் அமைத்தனர்.

மண்பானைகள்

அது போல் இப்பகுதி மலையை ஒட்டிய பள்ளத்தாக்கு பகுதியாகும். இங்கு மேற்கொண்ட மேற்பரப்பாய்வில் சிறிய அளவிலான சிவப்பு மண்பானைகள், முதுமக்கள் தாழியின் பாகங்கள், வழவழப்பான கைக்கோடாரி ஒன்று 3 சென்டிமீட்டர் அளவில் உடைந்த நிலையிலும் கிடைத்துள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களால் தமிழரின் நாகரிகம் மிகவும் தொன்மையானது எனவும், உலக நாகரிக வளர்ச்சிக்கு தமிழர்கள் தான் முன்னோடிகள் என்பது தெரியவந்தது.


Next Story