பண்ருட்டி அருகே15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர் சிற்பங்கள் கண்டெடுப்பு


பண்ருட்டி அருகே15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர் சிற்பங்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.

கடலூர்

புதுப்பேட்டை,

பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மொசகாத்தம்மன் கோவில் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 3 கற் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் முதுகலை வரலாறு மாணவர்கள் குமரகுரு மற்றும் சூர்யா, அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கற்சிற்பங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவை 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்களின் சிற்பம் எனவும் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் கண்டெடுத்த சப்தமாதர்கள் மகேஸ்வரி, பிராமி, மற்றொரு சிற்பம் முகம் முற்று பெறாத நிலையில் அடையாளம் காண முடியாமல் உள்ளது. இந்த கற்சிற்பங்கள் 15-ம் நூற்றாண்டை சேர்ந்தது. மகேஸ்வரி, பிராமி சிற்பங்கள் அவரவர்களுக்குரிய ஆயுதங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சியளிக்கிறார்கள். கண்டெடுத்த சிற்பங்கள் கை, முகம் போன்றவை சிறிது சிதைந்த நிலையில் உள்ளது. இங்கே இருக்கின்ற சிற்பங்களை பார்க்கும் போது இப்பகுதியில் சப்தமாதர்கள் கோவில் இருந்திருக்கலாம் என அறியமுடிகிறது என்றார்கள்.


Next Story