சிவலிங்கத்தின் அடிப்பாகம் கண்டெடுப்பு


வேலூர் பாலாற்றில் சிவலிங்கத்தின் அடிப்பாகம் கண்டெடுக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் பெருமுகை பாலாற்றின் கரையோரம் சில கற்கள் தென்பட்டது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். பின்னர் அங்கு மண்ணை தோண்டியபோது சில கற்கள் மற்றும் சிவலிங்கத்தின் அடிப்பாகம் தென்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் செந்தமிழ்அரசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு தூண் வடிவமைப்பை கொண்ட சிறு கற்களும், சிவலிங்கத்தின் அடிப்பாகமும் இருந்தது. இதை அதிகாரிகள் மீட்கும் நடவடிக்கையில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆற்றின் கரையோரம் சிவலிங்கம் மற்றும் கோவில் கட்டிடத்தில் பயன்படுத்தப்படும் தூண் வடிவமைப்பை கொண்ட கற்களும் கிடைத்துள்ளது. எனவே இந்த பகுதியில் கோவில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதி முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும். சிவலிங்கம் இந்த பகுதியில் இருக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story