வெளிநாட்டு சிகரெட் லைட்டர் விற்ற 2 வியாபாரிகளுக்கு அபராதம்


வெளிநாட்டு சிகரெட் லைட்டர் விற்ற 2 வியாபாரிகளுக்கு அபராதம்
x

வெளிநாட்டு சிகரெட் லைட்டர் விற்ற 2 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி

தேனி நகரில் உள்ள கடைகளில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளில், முறையான அறிவிப்புகள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இதுபோன்ற சிகரெட் லைட்டர்களில் விலை விவரம், தயாரிப்பு நிறுவன விவரம் முறையாக இல்லை என்பதால் கடைகளில் இருந்த 2 பாக்கெட் சிகரெட் லைட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை விற்பனை செய்த 2 கடைக்காரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story