புகையிலை பொருட்களை விற்ற 3 பேருக்கு அபராதம்
புகையிலை பொருட்களை விற்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மன்னார்குடி:-
மன்னார்குடியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், பயிற்சி துணை சூப்பிரண்டு இமயவரம்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகேசன், கண்ணன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் ருக்குமணி பாளையம், மேல ராஜவீதி ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பெட்டிக்கடைகாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அங்கிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மன்னார்குடி மேலகோபுர வாசல் பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் பாலாஜி என்பவருடைய கடையில் சோதனை செய்தபோது 13 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.