பாலக்கோட்டில் இறைச்சி, துரித உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-தரமற்ற பொருட்களை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு அபராதம்


பாலக்கோட்டில் இறைச்சி, துரித உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-தரமற்ற பொருட்களை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:30 AM IST (Updated: 28 Dec 2022 4:39 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோட்டில் இறைச்சி, துரித உணவகங்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். தரமற்ற பொருட்களை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தர்மபுரி

பாலக்கோடு:

அதிகாரிகள் ஆய்வு

பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, தர்மபுரி ரோடு, தக்காளி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள சில்லி சிக்கன் மற்றும் துரித உணவு கடைகள், தள்ளுவண்டி சாலையோர சில்லி சிக்கன், மீன் இறைச்சி கடைகள் மற்றும் பலகார கடைகளில் பாலக்கோடு உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் திடீரென ஆய்வு ெசய்தார்.

இந்த ஆய்வின் போது, 2 கடைகளில் செயற்கை நிறமேற்றிய சில்லி சிக்கனும், பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயும் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினார். 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.1,000் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிமம் புதுப்பிக்காத கடைகளை உடனடியாக விணணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

கடைகளில் தன் சுத்தம், சுற்றுப்புறம் சுத்தம், சுகாதாரம் பேணவும், இறைச்சி உள்ளிட்ட மூலப்பொருள்கள் தரமானதாகவும் உரிய விவரங்கள் அச்சடித்த பொருள்கள் வாங்கி உபயோகிக்கவும், சமையல் எண்ணெய் ஓரிரு முறைக்கு மேல் பயன்படுத்தாமலும், தேவையற்ற செயற்கை நிறமேற்றி ரசாயன பவுடர்கள் தவிர்க்கவும், குடிநீர் பாதுகாப்பான நீராக இருக்கவும் அதிகாரி நந்தகோபால் கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குளிர்பானங்கள் பறிமுதல்

மேலும் ஒரு முறை பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெயை கலனில் சேகரித்து உணவு பாதுகாப்பு துறை அங்கீகாரம் பெற்ற டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக்கொள்ள வழி உள்ளதாகவும் விவரம் தெரிவித்தார். மேலும் பஸ் நிலைய பகுதி, ஒரு குளிர்பானக்கடை மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதி பேக்கரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது 3 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story