7 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்


7 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
x

கும்பகோணத்தில் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற 7 ஆட்டோக்களின் டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்,

கும்பகோணத்தில் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற 7 ஆட்டோக்களின் டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

போலீசார் சோதனை

தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கும்பகோணம் பகுதியில் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் அதிக எண்ணிக்கையிலான பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் தொிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை கும்பகோணம் மேம்பாலம் அருகில் திடீர் சோதனை நடத்தினர்.

அபராதம்

சோதனையின் போது போலீசார் அந்த வழியாக அதிக எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ- மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர்களை நிறுத்தி பள்ளி மாணவ மாணவிகளை இறக்கிவிட்டு வேறு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றி வந்த 7 ஆட்டோக்களின் டிரைவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

அதிக எண்ணிக்கையில் மாணவ மாணவிகள் பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது தொடர்ந்தால் ஆட்டோவின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் ஆட்டோ டிரைவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story