குளச்சலில் சிறுவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை


குளச்சலில் சிறுவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
x

குளச்சலில் சிறுவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

கன்னியாகுமரி

குளச்சல்:

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மேற்பார்வையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறுவர்கள் ஓட்டி வந்த 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த வாகனங்களுக்கு தலா ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு விதிக்கப்பட்ட அபராதங்களை இணையதளம் வாயிலாக செலுத்தச் செய்தனர். மேலும், சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்க மாட்டோம் என பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதைதொடர்ந்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. வாகன சோதனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 12 வாகனங்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story