டெல்லியில் நடந்த தனிவிரல் ரேகை நிபுணர் தேர்வு:தூத்துக்குடி சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்ச்சி


டெல்லியில் நடந்த தனிவிரல் ரேகை நிபுணர் தேர்வு:தூத்துக்குடி சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்ச்சி
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடந்த தனிவிரல் ரேகை நிபுணர் தேர்வில் தூத்துக்குடி சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி

புதுடெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் கீழ் செயல்படும் தேசிய விரல் ரேகை பதிவு கூடத்தால் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய அளவில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான விரல் ரேகை நிபுணர் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாநிலங்களிலில் இருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வில் தூத்துக்குடி மாவட்ட தனி விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் வைஜெயந்தி மாலா, அருணாச்சலம், பிரேம்குமார், பழனிச்செல்வி ஆகிய 4 பேரும் கலந்து கொண்டு விரல் ரேகை நிபுணர்களாக தேர்ச்சி பெற்று உள்ளனர். அவர்கள் 4 பேரும் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்தினார்.


Next Story