2 போலீஸ்காரர்கள் மீது வழக்குப்பதிவு


2 போலீஸ்காரர்கள் மீது வழக்குப்பதிவு
x

வேதாரண்யம் அருகே கோவில் திருவிழாவில் தகராறு தொடர்பாக 2 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்;

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் பத்தர்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடிதிருவிழா கடந்த 10 நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு நடந்த திருவிழாவில் நடன நிகழ்ச்சி நடந்தது. இதை நிறுத்த வேண்டும் என்று நாகையில் வேலை பார்க்கும் தனிப்படை போலீஸ்காரர் பாலமுருகன் உள்பட சிலர் கூறி உள்ளனர். மேலும் இவர்கள், ஊர்தலைவர்களை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியினர் போலீஸ்காரர் பாலமுருகனை தாக்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி இரவு கோவிலில் நடந்த காவடி நிகழ்ச்சியை பார்க்க குட்டாச்சிகாட்டை சேர்ந்த கலைமணி என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் பாலமுருகன் மற்றும் மற்றொரு போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோர் கலைமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கலைமணி வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ்காரர்கள் சுரேஷ், பாலமுருகன் ஆகிய 2 பேர் மீது வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story