பனியன் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் எரிந்து நாசம்,
பனியன் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் எரிந்து நாசமானது
பனியன் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் எரிந்து நாசமானது
குடோன்
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே சேவூர் - புளியம்பட்டி சாலை சந்தையப்பாளையம் பிரிவு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் பனியன் வேஸ்ட் அரைக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இங்கு வட மாநில தொழிலாளர்கள் 5 பேர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரென குடோன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு பனியன் கழிவுகள் தீப்பிடித்து எரிந்தன. உடனே தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சேவூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
பொருட்கள் எரிந்து நாசம்
பின்னர் மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் தனியார் டேங்கர் லாரியில் தண்ணீரும் கொண்டு வரப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரம், பனியன் வேஸ்ட் பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் குடோனும் சேதம் அடைந்தது. இந்த தீ விபத்து குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.